ஆங்கிலத்தில் பேச எத்தனை சொற்கள் தெரிந்திருக்க வேண்டும்?


ஆங்கிலத்தை சரளமாக கதைக்க குறைந்த பட்சம் எத்தனை ஆங்கில சொற்களை நீங்கள் தெரிந்துவைத்திருக்க வேண்டும்?

பல மாதங்கள் அல்லது பல வருடங்கள் ஆங்கிலத்தை கற்ற பிறகும் சரளமாகவும் நம்பிக்கையுடனும் ஆங்கிலம் பேசுவது உங்களுக்கு கடினமாக இருக்கிறதா? அப்படியானால், உங்கள் நிலைமையை இன்னும் தெளிவாக புரிந்துகொள்ள இந்த பதிவு உங்களுக்கு உதவக்கூடும், அத்துடன் சில ஆங்கிலத்தில் பேசுவது தொடர்பான சில பயனுள்ள தகவல்களையும் நீங்கள் இங்கே காணலாம்.

ஆராய்ச்சிகளின் படி, ஆங்கிலத்தை தாய்மொழியாக பேசும் பெரும்பாலானவர்கள் பள்ளியில் சேரத் தொடங்கும் போது 3,000 முதல் 4,000 சொற்களையும், பல்கலைக்கழக படிப்பை தொடரும் போது 15,000 முதல் 20,000 சொற்களையும் கற்றுக்கொள்கிறார்கள். 

ஒப்பீட்டளவில் ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகக் கற்கும் பலரும் ஆங்கிலத்தில் 2,000 சொற்களை மட்டுமே பல்கலைக்கழக படிப்பை தொடரும் போதும் கற்றுக்கொள்கிறார்கள்.

ஒரு உரையாடலை சரியாகப் புரிந்துகொள்ள, நீங்கள் கேட்கும் சொற்களில் குறைந்தது 95% ஐ நீங்கள் தெரிந்துவைத்திருக்க வேண்டும் என இன்னுமொரு ஆராய்ச்சி கூறுகிறது. ஒரு பொதுவான உரையாடலைப் புரிந்துகொள்ள குறைந்தபட்சம் 3,000 ஆங்கில சொற்கள் தெரிந்திருத்தல் வேண்டும் எனவும் கூறப்படுகிறது.

உங்களால் ஏன் சரளமாக ஆங்கிலத்தில் பேச முடிவதில்லை?

மேலே தரப்பட்ட தகவல்களும் உங்களால் சரளமாக ஆங்கிலத்தில் பேச முடியாத காரணத்தை தெளிவுபடுத்துகின்றன.

ஆங்கிலத்தை தாய்மொழியாக பேசுகின்றவர்கள், அவர்கள் சொல்ல விரும்பும் விஷயங்களில் 95% ஐ வெளிப்படுத்த அவர்கள் அறிந்த 15% சொற்களை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். இந்த 15% சொற்களும் அவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் சொற்கள் என்பதே இதற்குக் காரணமாகும். ஆங்கிலத்தை தாய்மொழியாக பேசும் குழந்தைகளை அவதானித்தாலும், அவர்கள் பெரியவர்கள் பேசும் சொற்களையும் இலகுவில் விளங்கிக்கொள்கிறார்கள்.

ஆகவே மேலே கூறிய 3,000 சொற்கள் பற்றிய விடயம் ஆங்கிலத்தில் பேசுவதற்கும், ஆங்கில உரையாடல்களை புரிந்துகொள்வதற்கும் மிக முக்கியமானதாகப் புலப்படுகிறது.

ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகக் கற்கும் பலரும், ஆங்கிலத்தை தாய்மொழியாக பேசும் குழந்தைகளைப் போலவே ஆங்கிலத்தையும் கற்கிறார்கள், பேசுகிறார்கள். அவர்களின் ஆங்கில வகுப்புக்களும் பிரதானமாக ஆங்கில இலக்கணத்தைக் கற்றுக்கொடுப்பதற்கே முக்கியத்துவம் வழங்குகின்றன.

நீங்கள் சரளமாக ஆங்கிலம் பேச முடியாமல் இருப்பதற்கு இந்த 3,000 சொற்கள் எனும் எல்லையை நீங்கள் தாண்டாமல் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
Previous Post Next Post