நபர்களை பற்றி விவரிக்கும் 15 ஆங்கில மரபுத்தொடர்கள் | People Idioms in Tamil


மரபுத்தொடர்கள் என்பவை தொண்டுதொட்டு ஒரு விடயத்தை மறைமுகமாகக் கூறப் பயன்படும் சொற்றொடர்களாகும். இவை நேரடி அர்த்தத்தை தருவதில்லை. அதற்கு மாறாக இவற்றினுள் ஒரு பொதுவான அர்த்தம் புதைந்திருக்கும்.

இங்கே அவ்வாறாக ஆங்கிலத்தில் நபர்களைப் பற்றி விரிக்கப் பயன்படும் 15 புதிய மரபுத்தொடர்களையும் அவற்றின் தமிழ் கருத்து பற்றியும் பார்ப்போம்.

01. Daredevil 

இந்த மரபுத்தொடர் தேவையில்லாமல் ஆபத்தான காரியங்களில் ஈடுபடும் ஒருவர் பற்றிக் கதைக்கப் பயன்படுத்தப்படுகிறது.

02. Cheapskate

பணம் செலவழிக்க விரும்பாத கஞ்சத்தனமான ஒருவர் பற்றி விவரிக்க இந்த மரபுத்தொடர் பயன்படுத்தப்படுகிறது.

03. Barrel of laugh

எந்நேரமும் வேடிக்கையாக இருக்கும் ஒருவர் பற்றி விவரிக்க இந்த மரபுத்தொடர் பயன்படுத்தப்படுகிறது.

04. Old as the hills

மிகவும் வயதான ஒருவர் பற்றி விவரிக்க இந்த மரபுத்தொடர் பயன்படுத்தப்படுகிறது.

05. Oddball

விசித்திரமான ஒருவர் பற்றி விவரிக்க இந்த மரபுத்தொடர் பயன்படுத்தப்படுகிறது.

06. Elbow grease

கடினமாக சிரமப்பட்டு வேலை செய்யும் ஒருவர் பற்றி விவரிக்க இந்த மரபுத்தொடர் பயன்படுத்தப்படுகிறது.

07. Go-Getter

சுறுசுறுப்பான மற்றும் தங்கள் நினைத்த எந்த ஒரு காரியத்தையும் சாதிக்கும் ஆற்றல் கொண்ட ஒருவர் பற்றி விவரிக்க இந்த மரபுத்தொடர் பயன்படுத்தப்படுகிறது.

08. Born optimist

எப்போதும் நேர்மறை எண்ணங்களையுடைய ஒருவர் பற்றி விவரிக்க இந்த மரபுத்தொடர் பயன்படுத்தப்படுகிறது.

08. Culture vulture

கலாச்சாரத்தை விரும்பும் மற்றும் கலாச்சாரம், கட்டுப்பாட்டுடன் வாழும் ஒருவர் பற்றி விவரிக்க இந்த மரபுத்தொடர் பயன்படுத்தப்படுகிறது.

09. Eager beaver

தனது இலக்குகளை அடைவதற்காக எந்த சிரமத்தையும் பொருட்படுத்தாமல் முன்னோக்கிச் செல்லும் ஒருவர் பற்றி விவரிக்க இந்த மரபுத்தொடர் பயன்படுத்தப்படுகிறது.

10. Family man

தனது குடும்பத்துக்காக தன்னை அர்ப்பணிக்கும் ஒருவர் பற்றி விவரிக்க இந்த மரபுத்தொடர் பயன்படுத்தப்படுகிறது.

11. Good egg

நல்ல குணங்களுடைய நல்ல ஒரு மனிதரை பற்றி விவரிக்க இந்த மரபுத்தொடர் பயன்படுத்தப்படுகிறது.

12. Man of his word

வாக்குறுதியளித்தால் அதை அப்படியே நிறைவேற்றும் ஒருவர் பற்றி விவரிக்க இந்த மரபுத்தொடர் பயன்படுத்தப்படுகிறது.

13. Mover and shaker

எந்த ஒரு விடயத்தையும் சாதிக்கும் அளவுக்கு செல்வாக்குள்ள ஒரு நபர் பற்றி விவரிக்க இந்த மரபுத்தொடர் பயன்படுத்தப்படுகிறது.

14. Teacher’s pet

ஆசிரியருக்கு மிகவும் விரும்பப்பமான ஒரு மாணவனை பற்றி விவரிக்க இந்த மரபுத்தொடர் பயன்படுத்தப்படுகிறது.

15. Smart cookie

எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையையும் சாமர்த்தியமாக சமாளிக்கும் ஆற்றல் கொண்ட ஒருவர் பற்றி விவரிக்க இந்த மரபுத்தொடர் பயன்படுத்தப்படுகிறது.

இந்தப் பதிவு உங்களுக்குப் பயனளித்தது எனின் இதை கட்டாயம் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
Previous Post Next Post