DVSA Driving Theory Test (Tamil) & Life in the UK Test (Tamil) - தமிழ் மொழிபெயர்ப்பு மற்றும் விளக்கங்களுடன்!


DVSA Driving Theory Test Tamil & Life in the UK Test Tamil


UK நாட்டில் வாழும் நீங்கள் கட்டாயம் முகங்கொடுக்க வேண்டிய இரண்டு முக்கிய தேர்வுகளாகிய Life in the UK Test மற்றும் DVSA Driving Theory Test ஆகிய தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்படும் அணைத்து வினாக்ககளையும் தமிழ் மொழிபெயர்ப்பு மற்றும் மேலதிக விளக்கங்களுடன் புத்தக வடிவில் பெற்றுக்கொள்ளலாம்.


Life in the UK Test:

UK நாட்டின் நிரந்தர வதிவுரிமையை பெற்றுக்கொள்ள தகுதிபெற்றால், Life in the UK தேர்வினை நீங்கள் கட்டாயம் செய்தே ஆக வேண்டும். இல்லையெனில் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை சுமார் 4000 பவுண்களுக்கும் (4000 GBP) அதிகமான தொகையினை நீங்கள் வீசா நோக்கத்துக்காக செலவு செய்ய வேண்டி ஏற்படும். அத்துடன் Life in the UK தேர்வில் குறிப்பிட்ட தேர்ச்சி மட்டத்தை எட்டாத வரையில் உங்களுக்கு நிரந்தர வதிவுரிமையும் கிடைக்கப்போவதில்லை.


DVSA Driving Theory Test:

இது UK நாட்டில் ஓட்டுநர் உரிமம் அல்லது சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள இன்றியமையாத ஒரு தேர்வு. இதில் தேர்ச்சியடையாமல் நீங்கள் சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள முடியாது.


எமது தாய் நாட்டில் போலன்று இந்தப் பரீட்சைகளில் நீங்கள் அவ்வளவு சுலபமாக சித்தியெய்திவிட முடியாது. இந்த இரண்டு தேர்வுகளிலும் சித்தியடைய போதிய ஆங்கில அறிவு தேவைப்படுவதுடன், ஆங்கில அறிவுடன் சேர்த்து UK நாட்டின் வரலாறு, வீதி ஒழுங்குவிதிமுறைகள், நாட்டின் சட்ட ஒழுங்குகள், சுற்றுச்சூழல் பற்றிய அறிவு என பல விடயங்களை நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.


இவ்வருட இறுதிக்குள் UK நாட்டின் குடிவரவு உள்ளிட்ட பல சட்ட ஒழுங்குகளில் மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்டுவதால் இந்த இரண்டு தேர்வுகள் தொடர்பான எதிர்கால மாற்றங்களை இப்போதைக்கு கணிப்பிட முடியாது. நீங்கள் இத்தேர்வுகளை செய்யத் தகுதி பெற்றவராயின் இவ்வருட இறுதிக்குள் இவற்றை செய்து முடிப்பதே மிகவும் சிறந்தது.


UK வாழும் மாணவர்களுக்கான ஆங்கில வகுப்புக்களை நடாத்தும் அனுபவத்துடன் சேர்த்து, அவர்களில் சிலர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, *Life in the UK Test* மற்றும் *DVSA Driving Theory Test* ஆகிய இரண்டு தேர்வுகளிலும் அடிக்கடி கேட்கப்படும் அணைத்து வினாக்களையும் தொகுத்து தமிழில் மொழிபெயர்த்து, வினாக்களுக்கான மேலதிக தமிழ் விளக்கங்களுடன் புத்தக வடிவில் இந்த இரண்டையும் பிரசுரித்து இருக்கிறேன்.


உண்மையில் நான் இதற்காக செய்த உழைப்பு, செலவு செய்த கால-நேரம் மற்றும் அதற்காக என்னுடைய மாணவர்கள் எனக்கு அனுப்பிவைத்த பணம் என்பவற்றை விட இப்புத்தகங்களைப் படித்துவிட்டு அவர்கள் PASS செய்ததை குறிப்பிட்டு அனுப்பிய வாட்சப் செய்திகளே என்னுடைய முயற்சி வீணாகவில்லை எனும் திருப்தியை எனக்குத் அதிகளவில் தந்தது.



இரண்டு புத்தகங்களையும் ஒரே தடவையில் பெற்றுக்கொள்வதாயின் 20% விலைக்கழிவு உண்டு!

இந்த புத்தகங்கள் தேவைப்படுபவர்கள் +94 7296 88555 எனும் வாட்சப் இலக்கத்தினூடாக மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.


மேலும், ஐக்கிய இராச்சியத்தில் (UK) என்னுடைய நண்பன் (Selva Karan +44 7367 505580) மூலமும் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.




Previous Post Next Post