ஆங்கிலத்தில் புதிய சொற்களின் முக்கியத்துவம் - The Importance of Vocabulary


நிறையபேர் ஆங்கிலம் கற்றுக்கொண்டாலும், ஆங்கிலத்தில் பிரதானமாக கோட்டை விடும் (தவறிழைக்கும்) இடம் இது தான். புதிய சொற்களை தேடிக் கற்றுகொள்வதில்லை.

நீங்களே சிந்தித்துப் பாருங்கள், ஆங்கிலத்தில் 100 சொற்கள் தெரிந்த ஒருவரை விட 500 சொற்கள் தெரிந்த ஒருவர் ஆங்கிலத்தில் இன்னும் சிறப்பாகவும் விரிவாகவும் கதைக்க, எழுத முடியும். ஆங்கில வாக்கியங்களை வாசித்து புரிந்துகொள்ளவும், இன்னொருவர் கதைப்பதை புரிந்துகொள்ளவும் இலகுவாக இருக்கும். உண்மையில் புதிய சொற்களை அதிகளவில் தெரிந்துவைத்திருப்பது ஆங்கிலத்தில் உங்களுக்குள்ள தன்னம்பிக்கையை இன்னும் அதிகரிக்கும். 

உங்களுக்கு தெரிந்த ஆங்கில சொற்களின் எண்ணிக்கை 1000 - 2000 என கூடிச் செல்லும் போது நீங்கள் ஆங்கிலத்தில் கதைக்க, எழுத முடியுமான பரப்பு அதிகரிப்பதுடன், ஆங்கில வாக்கியங்களை வாசிப்பதிலும், இன்னொருவர் கதைப்பதை புரிந்துகொள்ளவதிலும் உள்ள கடினத்தன்மை இன்னும் குறைவடையும். ஆங்கிலத்தில் உங்கள் தன்னம்பிக்கை இன்னும் அதிகரிக்கும்.

புதிய சொற்களை கற்றுக்கொள்வது எப்படி?

ஆங்கிலத்தில் அதிகம் வாசிக்க வேண்டும். ஆங்கில பேச்சுக்களுக்கு அதிகளவில் செவிமடுக்க வேண்டும். ஒவ்வொரு புதிய சொல்லையும் அதன் அர்த்தத்துடன் தெரிந்துகொள்ள வேண்டும் (எழுதி வைத்துக்கொள்ளலாம்).

ஒரு ஆங்கில சொல் உங்கள் மனதில் அப்படியே பதிந்துவிட, அந்த ஒரு சொல்லை குறைந்தபட்சம் 5 இடங்களில் நீங்கள் பார்த்து அதன் அர்த்தத்துடன் விளங்கியிருக்க வேண்டும். அப்படியில்லாமல் ஒருமுறை பார்த்தவுடன் அது உங்கள் மனதில் பதித்துவிடப்போவதில்லை.

ஆங்கிலத்தை வாசித்து அல்லது உப தலைப்புகளுடன் (with subtitles) ஒரு ஆங்கில காணொளியை பார்த்து, ஒரு நாளைக்கு 2 சொற்கள் வீதம் மனதில் நிறுத்திக்கொண்டாலே, ஒரு மாதத்தில் 60 சொற்கள், வருடத்துக்கு 730 சொற்கள்.

ஆங்கிலத்தில் எதை வாசிக்கலாம்?
  • ஆங்கில நாளிதழ்கள் (மிகச் சிறந்தவை)
  • ஆங்கில நூல்கள்.

ஆங்கிலத்தில் எவ்வாறான காணொளிகளை பார்வையிடலாம்?
  • தொலைக்காட்சியில் ஆங்கில செய்திகளை பார்வையிடலாம். 
  • ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்டவர்கள் அல்லது ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் கதைக்கும் காணொளிகளை YouTube தளத்தில் சென்று உப தலைப்புக்களுடன் (with subtitles) பார்வையிடலாம். 
  • முடியுமென்றால் Breaking Bad அல்லது Walking Dead போன்ற ஏதாவது ஒரு TV Series இனை உப தலைப்புக்களுடன் (with subtitles) தொடர்ச்சியாகப் பார்வையிடலாம்.
Previous Post Next Post