Not to do something எனும் சொற்றொடரை வைத்து எப்படி கதைக்கலாம்? | ஆங்கிலத்தில் பேசுவோம்!


Not to do something எனும் சொற்றொடரை எவ்வாறான சந்தர்ப்பங்களில் பயன்படுத்த முடியும் என்பதை பின்வரும் உதாரணங்களோடு தெரிந்துகொள்வோம். 

1. I told you not to go there.
நான் உனக்கு சொன்னேன் அங்கே போக வேண்டாமென்று.
அல்லது
அங்கே போக வேண்டாமென்று நான் உனக்கு சொன்னேன். 

2. She told me not to come here.
அவள் எனக்கு சொன்னாள் இங்கே வர வேண்டாமென்று.
அல்லது
இங்கே வர வேண்டாமென்று அவள் எனக்கு சொன்னாள்.

3. Mother told me not to eat that.
அம்மா எனக்கு சொன்னார் அதை சாப்பிட வேண்டாமென்று.
அல்லது
அதை சாப்பிட வேண்டாமென்று அம்மா எனக்கு சொன்னார். 

4. I have decided not to play tomorrow.
நான் முடிவெடுத்திருக்கிறேன் நாளை விளையாடுவதில்லையென்று. 
அல்லது
நாளை விளையாடுவதில்லையென்று நான் முடிவெடுத்திருக்கிறேன். 

5. Teacher advised me not to come late.
ஆசிரியர் எனக்கு அறிவுறுத்தினார் தாமதமாக வர வேண்டாமென்று.
அல்லது
தாமதமாக வர வேண்டாமென்று ஆசிரியர் எனக்கு அறிவுறுத்தினார்.

6. My friend asked me not to reveal that secret.
எனது நண்பன் என்னிடம் கேட்டுக்கொண்டான் அந்த ரகசியத்தை வெளியில் சொல்ல வேண்டாமென்று.
அல்லது
அந்த ரகசியத்தை வெளியில் சொல்ல வேண்டாமென்று எனது நண்பன் என்னிடம் கேட்டுக்கொண்டான்.
Previous Post Next Post