ஆங்கில மொழியில் இலக்கங்களைக் குறிப்பிடும் முக்கிய 2 முறைகள்!


இந்த கட்டுரை ஆங்கிலத்தில் எப்படி இலக்கங்களை எண்ணுவது என்று கற்றுத்தருவதற்காக அல்ல. ஆங்கிலத்தில் இலக்கங்கள் எவ்வாறான முறையில் பயன்படுத்தப்படுகின்றன என்பது பற்றியே இந்த கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.

பொதுவாக ஆங்கிலத்தில் எழுதும் போதும், பேசும் போதும் இலக்கங்கள் 'Cardinals - கார்டினல்ஸ் ' மற்றும்  'Ordinals - ஓர்டினல்ஸ் ' என இரு முறைகளில் பயன்படுத்தப்படுகின்றன.

இலகுவாகக் கூறுவதென்றால், Cardinal இலக்கங்கள் One, Two, Three, Four, Five (1, 2, 3, 4, 5) எனவும் Ordinal இலக்கங்கள் First, Second, Third, Fourth, Fifth (1st, 2nd, 3rd, 4th, 5th) எனவும் குறிப்பிடப்படுகின்றன.

Cardinal இலக்கங்கள் பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்கள் எவை?

01. எண்ணிக்கையை குறிப்பிடுதல்

பொருட்கள் உற்பட எதாவது ஒன்றை அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவற்றை எண்ணுவதற்கு Cardinal இலக்கங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

உதாரணங்கள்: 

One book
ஒரு புத்தகம்.

Two books
இரண்டு புத்தகங்கள்.

Three books
மூன்று புத்தகங்கள்.

Four books
நான்கு புத்தகங்கள் 

என எண்ணிக்கொண்டே போகலாம்.

02. வயதை குறிப்பிடுதல் 

ஒருவரின் அல்லது எதாவது ஒன்றின் வயதைக் குறிப்பிடவும் Cardinal இலக்கங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

உதாரணங்கள்

Ten-year-old boy.
பத்து வயது சிறுவன்.

Twelve-year-old girl.
பன்னிரண்டு வயது சிறுமி.

Thirty-year-old man.
முப்பது வயது நபர்.

03. வருடங்களை குறிப்பிடுதல்

உதாரணங்கள்

He was born in 1990.
அவன் 1990 இல் பிறந்தான்.

I went to Canada in 2005.
நான் 2005 இல் கனடாவுக்கு சென்றேன்.

04. தொலைபேசி இலக்கங்கள், வாகன இலக்கங்கள் போன்றவற்றை குறிப்பிடுதல். 


Ordinal இலக்கங்கள் பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்கள் எவை?

01. ஒரு திகதியை குறிப்பிடுதல் 

உதாரணங்கள்

We will meet on the 25th of this month.
நாங்கள் இந்த மாதம் 25 ஆம் திகதி சந்திப்போம்.

I came on the 1st of January.
நான் ஜனவரி 1ஆம் திகதி வந்தேன்.

02. ஒரு தொடரில் உள்ள விடயங்களை குறிப்பிடுதல் 

உதாரணங்கள்

January is the first (1st) month of a year.
ஒரு ஆண்டின் முதல் மாதம் ஜனவரி.

I am the second (2nd) child in my family.
நான் எனது குடும்பத்தில் இரண்டாவது குழந்தை.

He got the fourth (4th) place in the competition.
போட்டியில் அவருக்கு நான்காவது இடம் கிடைத்தது.

03. ஒரு கட்டிடத்தில் உள்ள மாடிகளை குறிப்பிடுதல் 

உதாரணங்கள்:

First (1st) floor
முதலாவது மாடி
Second (2nd) floor
இரண்டாவது மாடி
Third (3rd) floor
மூன்றாவது மாடி
Fourth (4th) floor
நான்காவது மாடி

04. பிறந்தநாளை குறிப்பிடுதல்

உதாரணங்கள்:

Today is my twenty first (21st) birthday.
இன்று எனது 21வது பிறந்தநாள்.

He is celebrating his 40th birthday.
அவர் தனது 40வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

தற்போது ஆங்கிலத்தில் இலக்கங்களைக் குறிப்பிடும் முக்கிய இரண்டு முறைகளையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறோம். 

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதெனின், உங்கள் நண்பர்களுடனும் இதனை பகிர்ந்துகொள்ளலாம்.
Previous Post Next Post