ஆங்கில உச்சரிப்புக்கள் தமிழ் கருத்துடன் | English Pronunciations | SUNDAR PICHAI


ஆங்கிலத்தில் பேசும் போது ஆங்கில உச்சரிப்புக்கள் என்பவை முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு விடயமாகும். இது பற்றி சரளமாக ஆங்கிலம் பேசுவது எப்படி? எனும் பதிவில் விபரமாகக் குறிப்பிட்டிருந்தோம்.

ஆங்கில உச்சரிப்புகளை சரியாக அறிந்துகொள்ள அவற்றை சரியாக உச்சரித்துப் பேசுபவர்களுக்கு செவிமடுக்க வேண்டும். அவ்வாறு சரியான ஆங்கில உச்சரிப்புகளை உங்களுக்கு வழங்கும் ஒரு முயற்சியே எமது YouTube தளத்தில் தமிழ் துணைத் தலைப்புக்களுடன் பதிவிடப்படும் காணொளிகள். இவை உலக பிரபலங்களின் உரைகளில் இருந்து பெறப்படும் சிறு பகுதிகளாகும். 

இக்காணொளிகளில் இருந்து நீங்கள் ஆங்கிலத்தை எவ்வாறு உச்சரிப்பது என்பதுடன் அவர்கள் பேசும் ஆங்கில வாக்கியங்களினதும், சொற்களினதும் தமிழ் கருத்தையும் பெற்றுக்கொள்ளக் கூடிய முறையில் இவை உருவாக்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் சரியான உச்சரிப்புடன் கதைக்க ஆர்வமுடையவர்கள் கட்டாயம் இக்காணொளிகளை முழுவதுமாக பார்வையிடுங்கள்.

கீழே உள்ள காணொளியில் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) சுந்தர் பிச்சையின் ஒரு உரையில் உள்ள ஆங்கில உச்சரிப்புக்களையும் அவற்றின் தமிழ் கருத்தையும் நீங்கள் கண்டுகொள்ளலாம். 


இதுவரையில் எமது YouTube சேனலினை Subscribe செய்துகொள்ளாதவர்களும் Subscribe செய்துகொள்ளுங்கள்.

நீங்கள் ஆங்கிலத்தில் பேசும் போது உபயோகிக்கக் கூடிய சில ஆங்கில வாக்கியங்களின் தமிழ் கருத்தையும் கீழே கண்டுகொள்ளலாம்.

People working anywhere in the world
உலகில் எங்கு வேலை செய்பவர்களும்

People born anywhere in the world
உலகில் எங்கு பிறந்தவர்களும்

Can create a product
ஒரு தயாரிப்பை உருவாக்க முடியும்

Make it available
கிடைக்கச் செய்யுங்கள்

My personal journey
எனது தனிப்பட்ட பயணம்

22 years ago
22 வருடங்களுக்கு முன்பு

Like many of you
உங்களில் பலரைப் போன்று

My fascination with technology
தொழில்நுட்பத்துடனான எனது மோகம்.

My parents’ house
எனது பெற்றோரின் வீடு

Invention of the transistor.
டிரான்சிஸ்டரின் கண்டுபிடிப்பு.

Where do you come from?
நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?

What is your background?
உங்கள் பின்னணி என்ன?

One revolutionary idea
ஒரு புரட்சிகரமான யோசனை

One brilliant invention
ஒரு புத்திசாலித்தனமான கண்டுபிடிப்பு

You can't predict.
உங்களால் யூகிக்க முடியாது.

That’s why I came here. 
அதனால்தான் நான் இங்கு வந்தேன்.

I had a deep desire 
எனக்கு ஒரு ஆழ்ந்த ஆசை இருந்தது.

Exchange of ideas. 
கருத்துப் பரிமாற்றம். 

People didn’t care where I came from
நான் எங்கிருந்து வந்தேன் என்று மக்கள் அக்கறைகொள்ளவில்லை

Only my ideas and hard work. 
எனது யோசனைகளும் கடின உழைப்பும் மட்டும்.

I still vividly remember. 
எனக்கு இன்னும் தெளிவாக நினைவிருக்கிறது.

That opportunity changed my life.
அந்த வாய்ப்பு என் வாழ்க்கையை மாற்றியது.

Dream of building a business. 
ஒரு வியாபாரத்தைக் கட்டியெழுப்பும் கனவு.

The long hours, time away from family, the rejection.
நீண்ட மணித்தியாலங்கள், குடும்பத்தைப் பிரிந்திருக்கும் நேரம், நிராகரிப்பு.

There is a great quote from Thomas Edison 
தோமஸ் எடிசனின் ஒரு சிறந்த கூற்று உள்ளது.

I have not failed; I have just found ten thousand ways that don’t work.
நான் தோல்வியடைந்து இல்லை; நான் வேலை செய்யாத பத்தாயிரம் வழிகளை கண்டுபிடித்துள்ளேன்.

சிலவேளைகளில் இங்கே தரப்படும் ஆங்கிலப் பேச்சுக்களின் நேரடித் தமிழ் மொழிபெயர்ப்பினைப் பெற முடியாமல் இருக்கும். இதற்குக் காரணம் ஆங்கில பேச்சின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு தமிழ் பேச்சு வழக்கில் இல்லாமல் இருக்கலாம். இதேபோன்று தமிழ் பேச்சுக்களின் நேரடி ஆங்கில மொழிபெயர்ப்பும் ஆங்கில பேச்சு வழக்கில் இல்லாமல் இருக்கலாம். 

இங்கே எமது முயற்சியானது ஆங்கிலப் பேச்சுகளுக்குத் தகுந்த தமிழ் மொழிபெயர்ப்பை முடியுமானவரையில் ஆங்கில இலக்கணமும், தமிழ் பேச்சு வழக்கும் உடன்படக்கூடிய முறையில் தொகுத்து வழங்குவதாகும்.
Previous Post Next Post