உங்கள் ஆங்கில எழுதும் திறனை மேம்படுத்த உதவும் சில முக்கிய உதவிக் குறிப்புகளை இங்கே தருகிறோம்.
நீங்கள் உங்கள் தொழில் ரீதியாகவோ அல்லது அன்றாட பயன்பாட்டிற்காகவோ ஆங்கிலத்தில் எழுத விரும்பினால் இந்த உதவிக் குறிப்புகள் உங்களுக்கு கட்டாயம் பயனளிப்பவையாக அமையும் என நம்புகிறோம்.
சரி வாருங்கள், ஆங்கிலத்தில் எவ்வாறு திறம்பட எழுத முடியும் எனப் பார்க்கலாம்.
நீங்கள் எழுதும் ஒழுங்கில் கவனம் செலுத்துங்கள்.
மற்ற உதவிக்குறிப்புகளைச் செயல்படுத்தும் முன், நீங்கள் எழுதும் ஒழுங்கு குறித்து தெளிவாக இருங்கள். நீங்கள் வியாபார நோக்கங்களுக்காக எழுதுகிறீர்கள் என்றால், வியாபாரம் சார்ந்த ஆங்கிலத்தில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் ஒரு பரீட்சைக்கு எழுதுகிறீர்கள் என்றால், பரீட்சையில் எழுதும் ஒழுங்கில் நீங்கள் கவனம் செலுத்தவேண்டும்.
ஆகவே, மேலே கூறியது போல நீங்கள் எதைப் பற்றி எழுதப் போகிறீர்கள் மற்றும் நீங்கள் பயன்படுத்த விரும்பும் ஒழுங்கு குறித்து தெளிவாக இருங்கள்.
தற்போது, உங்களால் இரண்டாம் படிக்குச் செல்ல முடியும்.
மற்றவர்கள் எழுதும் முறைகளைத் தேடிக் கண்டுபிடித்து அதனை பிரதி செய்யுங்கள்.
முற்றுமுழுதாக இணையத்தில் இயங்கும் உலகில் மற்றவர்கள் எழுதும் முறைகளைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றை பிரதி செய்வது மிகவும் இலகுவானது. நீங்கள் விரும்பும் ஒழுங்கில் உள்ள கட்டுரைகளின் மாதிரிகளை இனங்கண்டுகொள்வது மிகவும் அவசியம்.
ஆங்கில இலக்கணத்தை சரியாகக் கற்றுக்கொள்வது முக்கியமானதாகும்.
பேச்சுவழக்கினைப் போலன்றி ஆங்கிலத்தில் எழுதும் போது இலக்கணப் பிழைகள் இல்லாமல் எழுத வேண்டும். இதில் முக்கியமாக கல்விசார் கட்டுரைகள், வியாபார நோக்கத்துடன் எழுதப்படும் கட்டுரைகளைக் மற்றும் மின்னஞ்சல்கள் என்பவற்றை குறிப்பிட முடியும்.
உங்கள் பரீட்சைகளில் எழுதும் கல்விசார் கட்டுரைகளில் இலக்கணப் பிழை இருந்தால் அவை உங்கள் பரீட்சைப் பெறுபேறுகளைப் பாதிக்கலாம். அதேபோல் உங்கள் வியாபாரக் கட்டுரைகளில் பிழைகள் இருந்தால், அவை உங்கள் வாடிக்கையாளர்களுடனான தொடர்பையும், உங்கள் வியாபாரத்தையும் கூட பாதிக்கக்கூடும்.
ஆகவே ஆங்கில இலக்கணத்தில் கவனம் செலுத்துவதும், இலக்கணப் பிழைகள் இன்றி எழுதப் பழகுவதும் மிக முக்கியமானதாகும்.
நிறையப் படியுங்கள்!
ஆங்கிலத்தில் எழுதும் நுட்பங்களை தொடர்ந்தும் கற்று வாருங்கள். நீங்கள் கற்றுக்கொள்ளும் அளவுக்கு உங்களால் திறம்பட எழுத முடியும். உங்கள் எழுத்துத் திறமையால் ஒருவரை கற்பனை உலகின் எல்லை வரைக்கும் கொண்டுசெல்ல முடியும். அவ்வளவு நுட்பங்கள் புதைந்துள்ளன ஒருவர் எழுதும் திறமையில்.
ஒவ்வொரு மொழிக்கும் எழுதும் நுட்பங்கள் வேறுபடும். ஆங்கிலத்திலும் பல்வேறு நுட்பங்கள் உள்ளன. அவற்றை சரிவர கற்றுக்கொண்டு உங்கள் எழுதும் திறனை மெருகூட்டிக்கொள்ள முடியும்.