ஆங்கிலத்தை வேகமாக கற்றுக்கொள்ள சில உதவிக்குறிப்புகள் | Tips to learn English quickly


ஆங்கிலம் என்பது இலகுவாக கற்றுக்கொள்வதற்கான மொழிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மேலும் ஆங்கிலத்தை கற்றுக்கொள்வதைப் பொருத்தமட்டில். நினைப்பது போல் வேகமாகக் கற்றுக்கொள்ளவதும் சாத்தியமற்றது. ஆனால் சில நுட்பங்களை பின்பற்றி கற்றலை ஆரம்பித்தால் உங்களால் ஆங்கிலத்தை வேகமாக கற்றுக்கொள்ள முடியும். 

உங்கள் கண்களில் படும் அனைத்தையும் போல்கற்றுக்கொள்ளும் சாதனமாக மாற்றுங்கள்.

அன்றாட வாழ்வில் புத்தகங்கள், செய்தித்தாள்கள், இணையதளங்கள், மின்னஞ்சல்கள், சமூக சமூக ஊடகங்கள், ATM இயந்திரங்கள் என உங்கள் கண்களில் படும் எதுவாக இருந்தாலும் அதில் இருந்து உங்கள் ஆங்கில அறிவுக்கு என்ன சேர்த்துக்கொள்ள முடியும் என்பதைப் பற்றி சிந்தியுயுங்கள். உண்மையில் உங்கள் அன்றாட வாழ்க்கையில் நீங்கள் தாண்டி வரும் இவ்வாறான விடயங்களில் இருந்து உங்கள் ஆங்கில அறிவை விருத்தி செய்துகொள்ள உங்களால் நிறைய விடயங்களை கற்றுக்கொள்ள முடியும்.

புதிய சொற்கள், பிழைகள் அற்ற சொற்கள், இலக்கணப் பிழைகள் அற்ற வாக்கியங்கள், புதிய வாக்கிய அமைப்புக்கள் என மேலே கூறப்பட்டவற்றில் இருந்து நீங்கள் கற்றுக்கொள்ள நிறைய விடயங்கள் இருக்கின்றன.

உதாரணமாக ஆங்கில செய்தித் தாள்களை எடுத்துக்கொண்டால், அவற்றில் உள்ள கட்டுரைகளை யார் எழுதியிருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? ஆங்கிலத்தில் ஆழமான தேர்ச்சியுடைய ஒருவரே அந்தக் கட்டுரைகளை வரைந்திருப்பார்கள். ஆங்கிலத்தில் ஓரளவு தேர்ச்சியுடையவர்கள் கூட இந்தக் கட்டுரைகளை வாசித்து விளங்கிக்கொள்ள ஆங்கில அகராதியின் உதவியை நாடக்கூடும். அந்த அளவுக்கு ஆழமான ஆங்கில சொற்கள் அங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும். 

உங்கள் சொற்களின் களஞ்சியத்தை எப்போதும் விரிவுபடுத்துங்கள்.

உண்மையைக் கூறுவதென்றால் ஆங்கில மொழியைப் பேசவும், ஆங்கில மொழியைக் கற்றுக்கொள்ளவும் நீங்கள் பயன்படுத்தக்கூடிய முக்கிய ஆயுதம் என்றால் அது ஆங்கில சொற்கள் என்றே கூறவேண்டும். அழகிய ஆங்கில சொற்களை வைத்தே வாக்கியங்கள் பல வடிவங்களில் மெருகூட்டப்படுகின்றன. சில வேளைகளில் ஒரு வாக்கியத்தில் புதைந்துள்ள முழு அர்த்தத்தையும் ஒரு சொல்லினுள் அடக்கிவிடலாம். அந்தளவுக்கு சொற்கள் பலம்மிக்கவை. 

பொதுவாக மேலே குறிப்பிடப்பட்ட அன்றாட வாழ்வில் நீங்கள் தாண்டி வரும் ஊடகங்களில் சொற்கள் பிழைகள் இன்றியே எழுதப்பட்டிருக்கும். நீங்கள் ஒரு வாக்கியமாக சொல்ல நினைப்பவை எல்லாம் ஒரு சொல்லாக இருப்பதையும் நீங்கள் காண்பீர்கள்.

ஆகவே எப்போதும் நீங்கள் தெரிந்துவைத்திருக்கும் ஆங்கில சொற்களில் அளவை கூட்டுவதில் கவனம் செலுத்துங்கள். இது ஆங்கிலத்தை வேகமாக கற்றுக்கொள்வதில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். 

முடியுமென்றால் ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்ட ஒரு நாட்டுக்கு சென்று சிறிது காலம் வசித்து வாருங்கள்.

ஆங்கிலம் கற்பதற்கும், ஆங்கிலத்தில் பேசுவதற்கும் பெரியதோர் சவாலாக அமைவது ஆங்கிலம் மொழி அற்ற சூழலில் நீங்கள் வாழ்வதே. ஒரு நாட்டின் தாய்மொழில் பேசப்படும் சூழலில் வாழும் போது குறித்த நாட்டின் தாய்மொழியை நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ கற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். சிலவேளைகளில் உங்களை அறியாமலே நீங்கள் அந்த நாட்டில் பேசப்படும் தாய்மொழியை கற்றுக்கொள்ள நிர்பந்திக்கப்படுவீர்கள்.

ஆகவே ஆங்கிலம் தாய்மொழியாக பேசப்படும் ஒரு நாட்டில் நீங்கள் வாசிக்கச் சென்றால் ஆங்கிலத்தை கற்பது உங்களுக்கு கட்டாயமாகிவிடும். எல்லாவற்றை விடவும் முக்கியமாக நீங்கள் ஆங்கிலதின் பயன்பாடு மிகவும் அதிகமாக உள்ள ஓர் சூழலில் வாழ்வதால், அது நீங்கள் வேகமாக ஆங்கிலத்தை கற்றுக்கொள்ள  இன்னும் உதவிபுரியும்.

நீங்கள் ஆங்கிலத்தை கற்றுக்கொள்வதற்காக மட்டும் அவ்வாறான ஒரு நாட்டுக்கு செல்லவேண்டும் என்று இங்கே கூறவறவில்லை. உங்கள் தொழில் அல்லது உயர்கல்வித் தேவை நிமித்தம் நீங்கள் அவ்வாறானதொரு நாட்டிற்கு செல்லும் சந்தர்ப்பம் ஏற்பட்டால், ஆங்கிலம் கற்றுக்கொள்வதற்கும் அது ஒரு நல்ல வாய்ப்பாக மாறிவிடும்.
Previous Post Next Post