ஆங்கிலத்தில் 'முடிவெடுத்தல்' பற்றி விவரிக்கப் பயன்படும் சொற்றொடர்கள் | English Phrases For Making Decision


தினசரி வாழ்வில் நீங்கள் எடுக்கும் முடிவுகளை ஆங்கிலத்தில் எவ்வாறு விவரிப்பது என்பது பற்றி இந்தப் பதிவினில் பார்க்கலாம்.

01. Come to a decision / Take a decision.

முடிவெடுப்பதன் முதல் படியாக, நீங்கள் ஒரு முடிவுக்கு வர வேண்டும், நீங்கள் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்பதை விவரிக்க எந்த சொற்றொடர்கள் பயன்படுகின்றன.

Take a decision now.
இப்போதே ஒரு முடிவெடுங்கள்.

You have to come to a decision.
நீங்களோ ஒரு முடிவுக்கு வரவேண்டியுள்ளது.

02. Tough decision.

ஒரு கடினமான முடிவை விவரிக்க இந்த சொற்றொடர் பயன்படுகிறது.

I made a very tough decision.
நான் ஒரு கடினமான முடிவை எடுத்தேன்.

03. Consider the pros and cons.

இங்கே pros எனப்படுவது ஒரு விடயத்தின் சாதகமான பக்கத்தையும் cons எனப்படுவது ஒரு விடயத்தின் பாதகமான பக்கத்தையும் குறிக்கும். ஆகவே இச்சொற்றொடர் ஒரு விடயத்தின் சாதகமான மற்றும் பாதகமான பக்கத்தை கருத்திற்கொள்வதை குறிக்கும்.

You have to consider the pros and cons before buying anything.
எதையாவது ஒன்றை வாங்க முன்னர் அதன் சாதகமான மற்றும் பாதகமான விடயங்களைப் பற்றி நீங்கள் கருத்திற்கொள்ள வேண்டும்.

04. Consider my options

இங்கே ஒரு விடயத்தைப் பற்றிய முடிவை எடுக்க முன்னர் அந்த விடயத்தில் உங்களுக்கு இருக்கும் தேர்வுகள் பற்றி விவரிக்க இந்த சொற்றொடர் பயன்படுகிறது.

05. Torn between

இரண்டு அல்லது பல விடயங்களுக்கு மத்தியில் ஒரு சரியான முடிவை எடுக்க முடியாமல் நீங்கள் திண்டாடுவதை விவரிக்க இந்த சொற்றொடர் பயன்படுகிறது.

ஒரு நாளில் நடக்க இருக்கும் உங்கள் இரண்டு நண்பர்களின் திருமணத்திற்கு நீங்கள் அழைக்கப்படும் போது,  உங்களால் யாருடைய திருமணத்திற்கு போவது என்று ஓர் முடிவெடுக்க முடியாமல் போகும். அவ்வாறான சந்தர்ப்பங்களை விவரிக்கவே இந்த Torn between எனப்படும் சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது. 
Previous Post Next Post